search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டமளிப்பு விழா"

    • ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.
    • பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார்.

    இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் 'ரங்கஸ்தலம்', 'தூபான்', 'துருவா', 'ஆச்சார்யா' போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படம் இவருக்கு பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்த்தையும் வழங்கியது. அந்த படத்தில் இவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    ராம்சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தில் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
    • 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.

    முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

    விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    • இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
    • அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிறுவனரானஏ.என் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு, பட்டமளிப்பு விழா தொடங்கியது.

    விழாவிற்கு தலைமை தாங்கிய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் இடைக்கால வேந்தரான கோமதி ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் பேராசிரியருமான பத்மஸ்ரீ. டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமை வகித்தார்.

    விழாவில் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரித்து, இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கழகத்தின் மதிப்பிற்குரிய ஏழு முன்னாள் மாணவர்கள் 'சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது' களைப் பெற்றனர்.

    தொடர்ந்து, உட்சுரப்பியல் மருத்துவரும் மற்றும் பொது மருத்துவரும் ஆன டாக்டர் உஷா ஸ்ரீராம் அவர்களுக்கு மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகிய துறைகளில் அவர் கொடுத்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் "ஹானரிஸ் காசா" கவுரவ விருது வழங்கப்பட்டது. மேலும், டாக்டர். நிமல் ராகவனுக்கு சமூகப் பொறுப்பு விருது வழங்கப்பட்டது.

    • நிகழ்ச்சியில் பேராசிரியர் வில்லியம் தர்மராஜா கலந்து கொண்டு பேசினார்.
    • விழாவில் மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை தலைவரும், கல்லூரி வளர்ச்சி கழக இயக்குநருமான பேராசிரியர் வில்லியம் தர்மராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து கல்லூரியில் (2018-2020, 2019 -2021, 2020-2022) -ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவிகள் 194 பேருக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரித் தலைவரும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயருமான எஸ். அந்தோணிசாமி விழாவிற்கு முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலர் சகாயஜான் பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மேரி ரபேலின் கிளாரட் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை யை வாசித்தார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பிறரோடு ஓப்பிடாமல், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்
    • மாணவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் அறிவுரை

    நாகர்கோவில், 

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவரும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாள ருமான இயேசுரத்தினம் தலைமையில் நடந்தது. தாளாளர் மரிய வில்லியம் முன்னிலை வகித்தார்.

    துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் வர வேற்று பேசினார். முதல்வர் மகேஸ்வரன் அறிக்கை சமர்ப் பித்தார். விழாவில் சந்திர யான் விண்வெளி ஆய்வு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் ஆசிர் பாக்கிய ராஜ் பங்கேற்று 512 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் 8 பேருக்கு ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டங்களும், 127 பேருக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களும், 377 பேருக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும் வழங்கப்பட் டன.

    தொடர்ந்து விஞ்ஞானி ஆசிர் பாக்கியராஜ் பேசும் போது, பட்டதாரிகளுக்கு நான் கூறுகின்ற அறிவுரை என்ன வென்றால் 'உனக்கு நிகர் நீ. பிறரோடு உன்னை ஒப்பிடுவதை விட்டுவிட்டு உன்னில் இருக்கும் திறமை களை வெளிக்கொணர வேண்டும் என்பதேயாகும்.நீங்கள் எந்த நிலையில் உயர்ந்தாலும் உங்கள் பெற் றோரையும் ஆசிரியர்களை யும் மதித்து செயல்பட வேண்டும் என்றார்.

    கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, புல முதல்வர்கள், துறை தலைவர்கள், பேரா சிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.

    விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
    • பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 75 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலை க்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூ ரியில் மாணவ ர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    அண்ணா பல்கலை க்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்க ல்வித்துறை அமைச்சரும், அண்ணா பல்கலை க்கழகத்தின் இணை வேந்தருமான பொன்முடி பட்டு க்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 3 அண்ணா பல்கலைக்கழக பொறியி யல் கல்லூரியை சேர்ந்த 333 மாணவ- மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    முன்பெல்லாம் இன்ஜினியரிங் படிப்ப தற்கு நுழைவு தேர்வு கட்டாயமா க்கப்ப ட்டிருந்தது. இதனால் கிராமப்புற இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கஷ்டப்பட்டு வந்த நிலையை கருத்தில் கொண்டு நுழைவு தேர்வை கலைஞர் ரத்து செய்தார். இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 25,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார்.
    • 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார்

    மார்த்தாண்டம் :

    கருங்கல் அருகே அமைந்துள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வ ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் பொறி யாளர் ஐசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம்மி பிறேமா அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்து நன்றி கூறினார். சிறப்பு விருந்தினராக ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அதில் மாண வர்கள் வேலைவாய்ப்பு களை உருவாக்கி வேலை கொடுக்கிறவர்களாக மாற வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ள பல காரியங்களை கண்டுபிடிக்க வேண்டும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் தோல்வியை வெற்றியின் படிக்கல்லாக மாற்ற வேண்டும். இது போன்ற பல அரிய கருத்துக்களை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எடுத்து கூறினார்.

    தொடர்ந்து 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கினார். மேலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற முதுகலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி அஸ்வினி, 5-வது இடம்பெற்ற முதுநிலை மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி திவ்யா, பல்கலை அளவில் 13-வது இடம் பெற்ற இளங்கலை சிவில் பொறி யியல் மாணவி அஜிரா ஆகியோர் பாராட்டப்பட்ட னர். அதனைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விளா அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

    முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன் கல்லூரியின் சாதனைகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். இதில் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி, முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா,பூமி குழுமம் தலைவர் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தினர்.

    சோகோ இந்தியா நிறு வன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாண வர்களை காணொலி காட்சி மூலம் வாழ்த்தினார்.இந்த பட்ட மளிப்பு விழாவில் மொத்த மாக 465 மாணவர்கள், 379 மாணவி கள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற்றனர். 16 பேர் பல்கலைக்கழக அள வில் ரேங்க் எடுத்து தங்க பதக்கம் பெற்றனர்.

    இக்கல்லூரியானது பிற்பட்ட கிராமப்புற இளை யோர் நலம் கருதி, கடந்த 2016-ம் ஆண்டு 40 என்ற எண்ணிக்கையில் இளங் கலை (கணிதம், கணினி யியல், வணிகப் பயன் பாட்டியல், தகவல் தொழில் நுட்பம்) ஆகிய பாடப் பிரிவுடன் ஆரம்பிக்கப் பட்டது.

    இன்று இளங்கலையில் 19 பிரிவுகளும், முதுகலை யில் 7 பிரிவுகளும் ஆய்வுப் பிரிவு கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகி யவை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பன்முகத் திறனுடன் மாநில அளவி லும், மாவட்ட அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற னர். மேலும் மாவட்ட கலெக்டர், மாநில முதல்- அமைச்சர்கள், அமைச்சர் கள், துணை வேந்தர்கள், பல்வேறு ஆளுமை களிட மும் பொற் கரங்களால் பண முடிப்பு களையும், விருதுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

    பட்டமளிப்பு விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேம மாலினி சுவாமிநாதன். முன்னாள் எம். எல். ஏ. எச்.ராஜா, நகர்மன்ற தலைவர் சே.முத்துதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • 16 பேர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெறுகின்றனர்

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் கலை யரங்கில் நடைபெறுகிறது.

    இதில் சிறப்பு விருந்தினர் களாக சோகோ நிறுவனத் தலைவர் பத்ம ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, பூமி குழுமம் பன்னாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெய்குமார், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    விழாவில் 465 மாண வர்கள்,379 மாணவிகள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற உள்ளார்கள்.இதில் 16 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று தங்கப் பதக்கம் பெற இருக்கிறார்கள்.பிற்பட்ட கிராமப்புற இளையோர் நலன் கருதி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இன்று இளங் கலையில் 19 பிரிவு களும், முதுகலையில் 7 பிரிவுகளும் உள்பட ஆய்வுப்பிரிவு, கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகியவையுடன் சிறப்பாக கல்வி பணியாற்றி வருகிறது.

    பட்டமளிப்பு விழா விற்கான ஏற்பாடுகளை பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன்,முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் சுவாமிநாதன்,பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
    • விழாவில் நகர செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் மீனாட்சி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். உதவி பயிற்சி அலுவலர் சேகர் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    விழாவில் நகர செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் சேர்மன் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, திரிகூடபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரான், நகர துணை செயலாளர் காசி, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், மதி, நல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • செக்கானூரணி அரசு ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கோச்சடை ஜெ.கே பென்னர் இந்தியா லிமிடெட் செல்வன் தினேஷ் டேவிட்சன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021- 23-ம் வருடம் வரை தொழிற்பயிற்சிகள் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா செக்கானூரணியில் நடைபெற்றது. விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் தலைமை வகித்தார். மண்டல பயிற்சி இணை இயக்குநர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். உடற்பயிற்சி அலுவலர் செல்வராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோச்சடை ஜெ.கே பென்னர் இந்தியா லிமிடெட் செல்வன் தினேஷ் டேவிட்சன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் மாவட்டத் திறன் அலுவலக உதவி இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஜெயா, அரசு கள்ளர் கல்லூரி விடுதி காப்பாளர் சிவக்குமார், சாய் பர்னிச்சர் உரிமையாளர் தனசேகரன், பயிற்சி அலுவலர் குபேந்திரன், அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், லோகோ பைலட் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

    • மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
    • உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துனர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்றவைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின் போதே தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய-மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என்.வி.நதிச்சந்திரன் தலைமை தாங்கினார். வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். இதில் அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பயிற்சி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    ×